National Youth Model United Nations – Tamil

We have arrived

நம் நாட்டின் இளைஞர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி நல்லிணக்கத்துடன் அவர்களை வழிநடத்த தேசிய இளைஞர் மாடல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஒரு முறை எழுந்தருளியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனோடு இணைந்த அமைப்புக்களின் மாதிரி தொழிற்பாடுகள் சம்பந்தமான 14-30 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கான இரு நாள் மாநாடாக தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (NYMUN) விளங்குகின்றது. இவ் வருடம் மூன்றாவது முறையாக இம் மாநாடானது  செப்டம்பர் மாதம் 29th 30th திகதிகளில் கொழும்பில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

250 யுவதிகளை கொண்டு 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட NYMUN மாநாடானது, 2017ம் ஆண்டில் 350 பிரதிநிதிகள்  (delegates)   உடன் வெற்றிகரமாக நடைப்பெற்றது. இவ்விரு வெற்றிகளையும் தொடர்ந்து இவ்வருடமும் நாம் மிகப்பெரிதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 1500  வாலிபர்களை கொண்டு NYMUN மாநாட்டினை நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.  

இன்றைய இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் நிகழும் நிதர்சனமான விடயங்களை ஓர் திறந்த மன்றத்தில், அவர்கள் முன் எடுத்துரைப்பதன் மூலம் உலக விவகாரங்களை அம்பலப்படுத்தி அவர்களை ஓர் பரந்த மற்றும் தெளிந்த எண்ணத்துடன் சமூகத்திற்கு பங்காளிகளாக அனுப்புவதுவதே எமது நோக்கமாக இருக்கின்றது.

 

இலங்கையில் இளைஞரிடையே நடாத்தப்படும் மிகப் பெரிய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையாக NYMUN திகழ்கின்றது. கடந்த ஆண்டைப்  போன்றே இவ் ஆண்டும் இம் மகாநாட்டை மும்மொழியில் நடாத்த நீர்மானிக்கப்பட்டுளளது. இதன் மூலம் மொழித்  தடையின்றி தங்கள் கருத்துக்களை பறிமாற்றிகொள்ள NYMUN  சிறந்த களமாக அமைகின்றது. தேசியளவில் எட்டுத்திக்கிலும் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்காக, கொழும்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ள மாநாட்டுக்கு தொடர்புடைய 8 பட்டறைகளை 8 மாகணங்களிலே நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

 

வெற்றிகரமாக நடைப்பெற்ற முன் இரு மாநாட்டின் தொடர்ச்சியாய் எமது முண்நோக்கு தற்போது NYMUN V 2020 நோக்கியே உள்ளது. மூன்று வருடங்களில் அதீத இளைஞர் பங்கேற்றலுடன் நாடளாவிய ரீதியிலே மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை நிலைநாட்ட நாம் செயற்பட முற்படுவோம்.      

 

இளைஞர்களான நாம், உலக தலைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவாதித்து அவற்றை இனங்கண்டு நிலையான ஓர் தீர்வினை முன்வைக்க ஓர் அற்புதமான வாய்பாக இம் மாநாடு திகழ்கின்றது. இளைஞர்கள் ஒன்று கூடி சந்தித்து தங்கள் கருத்துக்களை பரிமாற்றுவதற்கு ஒரு தளமாக செயல்படுவதோடு, நாளைய தலைவர்களாக திகழ இருக்கும் தனிநபர்களிடையே நீடிக்கும் பந்தத்தினை ஏற்படுத்தும் மையமாக NYMUN திகழ்கின்றது. பரந்த குழு தெரிவினூடாக .நா. தொடர்பான உள்ளார்ந்த அறிவையும் பங்குபற்றுபவர்களின் திறனை மேலும் மெருகூட்டுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாங்கள் முன்வருகின்றோம்.

பதிவுகள் மற்றும் NYMUN குறித்து மேலும் அறிந்துகொள்ள www.nymunsl.org என்ற எம் இணையத்தளத்தினை பார்வையிடவும். மேலும் விபரங்கள் அல்லது கேள்விகளுக்கு registrations@nymunsl.orgஎனும் மின்னஞ்சலினூடாக எம்மை தொடர்புகொள்ளலாம்.

இலங்கையின் மாடல் ஐக்கிய நாடுகள் சபையின் வருங்கால தலைவர்களுக்கான வழியினை உருவாக்குவதற்காக எம்முடன் இணைந்து செயற்படுவீராக.

 

Uniting Nine Provinces, One Nation, One Conference.