2020 பார்வை

தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை என்பது (NYMUN) இலங்கையில் வாழும் 18-30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான,ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் இணைந்த அமைப்புக்கள் பற்றிய ஒரு தேசிய உருவகப்படுத்துதல் மாநாடு ஆகும். NYMUN ஆனது 2016 மற்றும் 2017 களில் இரண்டு வெற்றிகரமான மாநாடுகளை நடாத்தியதன் மூலம்,அதன் பங்கேற்பாளர்களிடையே வெளிநாட்டு விவகாரங்களைப் புரிந்து கொள்ளவும், தூதரக திறன்களை வளர்த்துக் கொள்ளவும் பாரிய பங்காற்றியிருக்கின்றது

நாங்கள் இந்த NYMUN முயற்சியின் மூலம் இலங்கையில் ஒரு உறுதியான நிலைமை மாற்றத்தை கொண்டு வருவதற்கும்,இளைஞர்களுக்கு அவர்களின் மதிப்பீடுகளை தக்கவைத்துக் கொள்ள மற்றும் அவர்களின் சமுதாயத்தை கட்டியெழுப்பவும் ஒரு பொதுவான தளத்தை அமைத்துக்கொடுக்க விரும்புகின்றோம். இதை மனதில் கொண்டு, இதை மனதில் கொண்டு, இந்த வருடம் NYMUN ஆனது Vision 2020 ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. இந்த vision 2020 ஊடாக இலங்கை தீவில் வாழும் இளைஞர்களின் முழுத் திறமைகளையும் தட்டி எழுப்பி,நிலவும் பிரச்சினைகளின் மூல காரணங்களை இனங்கண்டு, திட்டமிட்ட மாற்றங்களை கொண்டு வர, அவர்களின் கருத்துக்கள் மற்றும் புதுமையான தீர்வுகளை வெளிக்கொணர வாய்ப்பை வழங்குவோம்.

இலங்கை இளைஞர்களின் குரல்கள் ஒலிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால்,அவர்களின் கருத்துக்கள் கருதப்படுதல்,அரசியல் சட்ட மற்றும் பொருளாதார அமைப்புமுறைகள் நேர்மையாக செயல்படலை உறுதிப்படுத்தல் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் என்பவையே இந்த vision 2020 யின் முக்கிய நோக்கமாகும். இலங்கையில் இதுவரை இளைஞர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை ஆராயும் வாய்ப்பொன்று இதுவரை கிடைக்கவில்லை.உண்மையில்,இதுவே, மாற்றத்திற்காக போராடும் இளைஞர் சங்கங்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,இளைஞர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட பங்கேற்பாளர்கள் என இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த இளைஞர்களை ஒன்றுசேர்க்கும் முதலாவது இளைஞர் பேரவையாக அமையவுள்ளது.

vision 2020 என்பது மூன்று வருடங்களுக்கு திட்டமிட்டிருக்கும் ஒரு மூன்று கட்ட வேலைத்திம் ஆகும். முதல் மற்றும் அடிப்படை கட்டமானது,ஐ.நா என்றால் என்ன ,ஐ.நா இயங்கும் முறை மற்றும் அதன் நடவடிக்கைகள் பற்றிய தெளிவூட்டல் ஆகும். இதற்காக NYMUN குழுவானது,ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் ஒரு சிறப்பு துணை குழுவுடன் இணைந்து, விரிவான தொகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை தயாரித்து அதனை இளைஞர்களுடன் பகிரவும் , விழிப்புணர்வுகளை பட்டறைகள் நடாத்தவும் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இரண்டாவது கட்டமாக, 2019 ல், 9 மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு மாகாண மாதிரி ஐக்கிய நாடுகள் (MUN) ஏற்பாடு செய்யப்படும் . இது மூன்று மாகாணங்களை ஒரு மாநாட்டிற்குள் உள்ளடக்கியிருக்கும், அதில் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சிறந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டில்,உள்ளூர் சூழலுக்கு சர்வதேச விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் தக்கவைத்துக்கொள்வதற்காக,உள்ளூர் மட்டத்தில் உலக தலைப்புகளை கலந்துரையாடுவதற்கு வழியமைத்துக் கொடுக்கப்படும்.
மூன்றாவது மற்றும் இறுதி கட்டமானது 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும். இலங்கையின் 9 மாகாணங்களிலிருந்தும் சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்து , அவர்களை ஒரு பெரிய மற்றும் சிறந்த சட்டசபையின் பகுதியாக்குவதன் மூலம் , அவர்களின் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளின் மூலம் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவதட்கான,புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வர தளம் உருவாக்கிக்கொடுக்கப்படும் .

Vision 2020 என்பது ஒரு பெரிய அளவிலான வேலைத்திட்டமாகும், எவ்வெற்றிப்பயணத்திற்கும் மொழி ஒரு தடையாகாது எனும் எம் நம்பிக்கையின் படி மும்மொழிகளிலும் எடுக்கப்படும் இம்முயற்சியில் எமது நாட்டு இளைஞர்களுக்கு சரியான உத்திகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான தளத்தை வழங்குவோம் என நம்புகிறோம்.